Mann Ki Baat குடிநீரை சேமிக்கும் வழி குறித்து வழிகளைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
New Delhi: பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார்!!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார்.
இன்று தன்னுடைய உரையில் இந்திய மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். “பிப்ரவரி மாதத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தேன். மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் தனது மாதாந்திர உரையில் பெரும்பகுதியை நீர் நெருக்கடி குறித்த பிரச்னையில் கவனம் செலுத்தினார். குடிநீரை சேமிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“கடந்த சில மாதங்களாக நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பலர் எழுதியுள்ளனர். நீர் பாதுகாப்பு குறித்த அதிக விழிப்புணர்வைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புறங்கள் முழுவதும் நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அடைய வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கடுமையான நீர் நெருக்கடி நிலவு வருவது குறிப்பிடத்தக்கது.