Read in English
This Article is From Jul 03, 2020

சீன ராணுவம் தாக்குதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து மோடி ஆறுதல்!

உலகின் மிகக் கடினமான சூழலில் உங்களின் முழு உழைப்பையும் கொடுத்து வருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப, இந்திய ராணுவம்தான் உலகிலேயே மிகச் சிறந்தது என்பதை நிரூபித்து வருகிறீர்கள் என்று மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement
இந்தியா

Highlights

  • பிரதமர் நரேந்திர மோடி லே-க்கு இன்று திடீர் பயணம் மேற்கொண்டார்
  • லே-வில் வீரர்கள் மத்தியில் மோடி உரையாற்றி உற்சாகப்படுத்தினார்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு மோடி நேரில் ஆறுதல்
Leh:

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். 

இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருந்தனர். எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், பிரதமரின் திடீர் வருகையானது ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, 'உலகின் மிகக் கடினமான சூழலில் உங்களின் முழு உழைப்பையும் கொடுத்து வருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப, இந்திய ராணுவம்தான் உலகிலேயே மிகச் சிறந்தது என்பதை நிரூபித்து வருகிறீர்கள். 

இங்கிருந்து நீங்கள் அனுப்பிய தகவல் உலகையே அடைந்துள்ளது. அது மிக உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியர்களும், நீங்கள் நாட்டை பலமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பீர்கள் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள். 

Advertisement

தன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். லடாக்கில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கும், ஒவ்வொரு கல்லுக்கும், ஒவ்வொரு நதிக்கும், அது இந்தியாவைச் சேர்ந்தது என்பது தெரியும்.' என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து சீன ராணுவத்தின் தாக்குதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

Advertisement
Advertisement