Read in English
This Article is From Jun 26, 2019

காங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...? மோடியின் காரசாரமான பேச்சு

எதிர்க்கட்சிகள் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்றால் ஊடகங்கள் விற்பனையாகிவிட்டதா? அப்போ தமிழகத்திலும் கேரளாவிலும் என்ன நடந்தது?

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

காங்கிரஸ் தோற்றால் இந்தியாவே தோற்றதாகுமா? அராஜகத்துக்கு ஒரு எல்லை உண்டு என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காரசாரமாகப் பேசியுள்ளார். மாநிலங்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்ந்திர மோடி, தற்போதெல்லாம் வாக்காளர்கள் மிக மிக விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் மக்களவையில் மட்டுமல்ல, மாநிலங்களவையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த முறை அதையெல்லாம் நினைவில் வைத்தே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். காங்கிரஸினால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் பெற்ற தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. 

நான் கடுமையான அதிர்ந்து விட்டேன். எதிர்க்கட்சிகள் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்றால் ஊடகங்கள் விற்பனையாகிவிட்டதா? அப்போ தமிழகத்திலும் கேரளாவிலும் என்ன நடந்தது? 

காங்கிரஸ் தோற்றுவிட்டது என்றால் அதற்காக இந்தியா தோற்று விட்டது என்று அர்த்தம் ஆகுமா...? அப்படி என்றால் ரேபரேலியில் இந்திய தோற்று விட்டதா..? வயநாட்டில் இந்தியா தோற்றுவிட்டதா? திருவனந்தபுரத்தில் இந்தியா தோற்று விட்டதா? என்ன விதமான வாதம் இது? 

Advertisement

1950 ஆண்டுக்குப் பிறகு தேர்தல் நடைமுறை நன்கு மேம்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாக்குப்பதிவு அதிக நேரம் நடந்தது. அதில் வாக்குப் பெட்டி கைப்பற்றுதல் வன்முறை வெடிப்பு என நிகழ்ந்தது. ஆனால் இப்போது குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது கூட செய்தியாகும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். 

Advertisement