This Article is From Feb 23, 2019

காஷ்மீருக்காக தான் எங்கள் போராட்டமே தவீர, காஷ்மீரிகளுக்கு எதிராக அல்ல! - பிரதமர் மோடி

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, மேற்குவங்கம் முதல் ஜம்மு வரை பல காஷ்மீரிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பிரதமர் மோடி ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ஹைலைட்ஸ்

  • புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரிகள் தாக்கப்படுகின்றனர்.
  • இந்த தாக்குதல்களை தடுக்க உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • தீவிரவாதத்தால் காஷ்மீரிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர் என பிரதமர் கூறினார்.
Tonk, Rajasthan:

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக வன்முறை சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, காஷ்மீருக்காக தான் எங்கள் போராட்டமே தவீர, காஷ்மீரிகளுக்கு எதிராக அல்ல. தீவிரவாதத்தால் காஷ்மீரிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேற்குவங்கம் முதல் ஜம்மு வரை காஷ்மீரி மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும் தாக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பலர் வெளியேறியுள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். எனினும், இதுவரை பாஜக தலைவர்கள் யாரும் இந்த தாக்குதல் சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்தது இல்லை, ஆனால், பாஜகவின் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் சிரோன் மணி அகாளி தளம் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு பிதலளித்த முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, தீவிரவாத சம்பவம் நிகழந்து ஒருவாரம் கடந்த நிலையில், காஷ்மீரிகள் இத்தனை நாட்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகி வந்த நிலையில், பிரதமர் மோடியின் வார்த்தைகள் அவர்கள் மீதான தாக்குதலை காக்கும் என்று அவர் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 

:

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

.