This Article is From Jun 01, 2020

'மீண்டும் மோடிதான் பிரதமாக வர வேண்டுமென 70% இந்தியர்கள் விரும்புகின்றனர்' - எடியூரப்பா

முத்தலாக் முறையை ஒழித்தது, வெளிநாட்டில் இருப்பவர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம், ராமர் கோயில் பிரச்னையை முடித்து வைத்தது என பல முக்கிய நடவடிக்கைகளை மோடி எடுத்துள்ளார். 

'மீண்டும் மோடிதான் பிரதமாக வர வேண்டுமென 70% இந்தியர்கள் விரும்புகின்றனர்' - எடியூரப்பா

கொரோனா வைரஸ் பாதிப்பை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Bengaluru:

அடுத்த முறையும் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் வரவேண்டும் என்று 70 சதவீத இந்தியர்கள் விரும்புவதாக கர்நாடக முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கூறியுள்ளார். 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் பேசியதாவது-

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் பிரதமர் மோடியை இரும்பு மனிதர் என்று அழைக்கிறேன்.

நாட்டில் 70 சதவீத மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியே வர வேண்டும் என் விரும்புகின்றனர். அப்படி அவர் வந்தால் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைப்பார். இளைஞர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 

மோடி தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். அனைத்து மாநிலங்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார். தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வலிமை மிக்க தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். 

முத்தலாக் முறையை ஒழித்தது, வெளிநாட்டில் இருப்பவர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம், குடியுரிமை சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம், ராமர் கோயில் பிரச்னையை முடித்து வைத்தது என பல முக்கிய நடவடிக்கைகளை மோடி எடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டு வருகிறார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், இந்த பிரச்னையை கையாளுவது சாதாரண காரியம் அல்ல. 

பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி செயல்படுத்துகிறார். 

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார். 

.