நம் நாடு பல எதிர்ப்புகளையும், சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன
ஹைலைட்ஸ்
- India would set an example in economic revival, PM Modi predicted
- PM said a "golden chapter" began in Indian democracy this day last year
- India's stature rose significantly, he said
New Delhi: நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பாஜக இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மோடி இரண்டாவது முறைாயக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது,
“நாடு ஒரு வரலாற்று திருப்பத்தினை ஏற்படுத்தி வேகமாக முன்னேறி வந்தது. ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். கொரோனா தொற்று நோய் தடுப்பில் இந்தியா எடுத்திருந்த சிறப்பான முடிவுகளை போல, பொருளாதார மறு தொடக்கத்திலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணதாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்.“ என மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் இக்காலகட்த்தில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“
“இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சைக்கிள் மூலமாகவும், வெறும் கால்களுடன் நடந்தும், லாரிகளில் பயணித்தும் சென்றடைகின்றனர். ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதன் காரணமாக இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.“
“நம் நாடு பல எதிர்ப்புகளையும், சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன. நான் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இரவும், பகலும் உழைக்கின்றேன். என்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
“சர்வதேச அளவில் இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தப்படமாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவிற்கு ஒரு பொற்காலம் தொடங்கியது. பல காலகட்டங்களுக்கு பிறகு மக்கள் முழு பெரும்பான்மையுடன் முந்தைய ஆட்சியிலிருந்த அதே கட்சிக்கு வாக்களித்திருந்தனர். சாதாரண காலகட்டங்களில் நான் உங்கள் மத்தியில் இருந்திருப்பேன். ஆனால், இது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நேரம். எனவே இந்த கடிதத்தின் மூலமாக உங்கள் ஆசீர்வாதங்களை நான் தேடுகின்றேன்.“ என மோடி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகமானது, ஊழிலிருந்து தன்னை தனியே பிரித்தெடுத்துக்கொண்டது. நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. நாட்டு மக்களின் கவுரவம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏழைகளின் கவுரவம் கணிசமாக உயர்ந்துள்ளது.“ எனக்கூறி ஆட்சிக்கு வந்ததிதிலிருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கோள்காட்டினார். “2016ல் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019ல் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய விமான தாக்குதல், போன்றவையும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து நாட்டு மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பின் உணர்வை வளர்த்தது.“ என பலவற்றை பிரமதர் குறிப்பிட்டார். மேலும், அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை இந்திய பன்முகத்தன்மையின் வெளிப்பாடு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்துள்ளதாகவும், இது போன்ற பல வரலாற்று முடிவுகள் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எடுக்கப்பட்ட பல முடிவுகளை அரசு வீரியத்துடன் இனி வரும் காலகட்டங்களில் அமல்படுத்தும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா தொற்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய தொடங்கியவுடன், பல உலக நாடுகள், இந்தியா உலகிற்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் எனக் கருதியது. ஆனால், இன்று பல உலக நாடுகள் நம்மை பார்க்கும் வித்தினை மக்களாகிய நீங்கள் மாற்றியமைத்துள்ளீர்கள். இந்தியாவின் ஆற்றல் என்பது கூட்டு வலிமை என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இந்த ஆற்றலானது வளமான பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இணையற்றது“ என மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், தொற்றுக்கு எதிராக களத்தில் நின்றவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையோடு கைதட்டி, விளக்கேற்றி தங்களுடைய ஒற்றுமையை மக்களாகிய நீங்கள் வெளிக்காட்டினீர்கள். இவ்வாறான நெருக்கடி நிறைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர்.என மோடி கூறியுள்ளார்.