বাংলায় পড়ুন Read in English
This Article is From May 18, 2019

கேதார்நாத் மலைக்குகையில் பிரதமர் மோடி தியானம்! காவி உடையில் பிரார்த்தனை!!

இன்றிரவு விடிய விடிய பிரதமர் மோடி தியானத்தில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

கேதார்நாத் மலைக்குகையில் பிரதமர் மோடி

Kedarnath:

.மக்களவை தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் மலைக்குகையில் தியானத்தில் இருந்து வருகிறார். இன்றிரவு விடிய விடிய அவர் தியானத்தில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கேதார்நாத் நாத் கோயிலில் இன்று பிரதமர் மோடி பிரார்த்னை மேற்கொண்டார். நாளை டெல்லிக்கு திரும்பும் முன்பாக பத்ரிநாத் கோயிலுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


கேதார்நாத் கோயிலில் மோடி இருக்கும் புகைப்படத்தை உத்தரகாண்ட் மாநில பாஜக வெளியிட்டுள்ளது. முன்னதாக உத்தரகாண்ட்டில் வெள்ள பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். 
 

இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கேதார்நாத் பயண புகைப்படங்களுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை எழில்மிகு காட்சிகளையும் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். மோடியின் கேதார்நாத் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 

Advertisement