This Article is From Apr 11, 2020

'மக்களையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்' :முதல்வர்கள் கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரியில் வேலையின்மை சதவீதம் 7.2-ஆக இருந்தது. இது 10.4 ஆக அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

'மக்களையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்' :முதல்வர்கள் கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-வரை நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்க நீட்டிப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
  • மக்களையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற பிரதமர் மோடி வலியுறுத்தல்
  • ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்
New Delhi:

மக்களையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் செவ்வாயுடன் முடிவடைகிறது. ஆனால் பாதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் மாநில அரசுகள் அதிர்ந்து போயுள்ளன.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது அறிவித்தபடி ஏப்ரல் 14-ம்தேதியுடன் முடித்துக் கொள்வதா என்பது குறித்து முடிவு செய்ய, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்சிங் முறையில் அனைத்து மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் 13 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் இல்லாவிட்டால் நிலைமை விபரீதம் அடைந்து விடும் என்று கவலை தெரிவித்தனர். ஏப்ரல் 30- வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

அதே நேரத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நாடே முடங்கிப்போயுள்ளதால் பொருளாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதாரம் இன்னும் பாதிப்பு அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை குறிப்பிட்டு முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மோடி வலியுறுத்தியுள்ளார்.

'ஊரடங்கை விதித்தபோது மக்கள் இல்லாவிட்டால் பொருளாதாரம் இருக்காது என்று கூறியிருந்தேன். நாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும். அதேபோன்று பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்' என்று முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேசியுள்ளார். இந்த கூட்டம் 4 மணி நேரமாக நடந்திருக்கிறது. 

நாட்டின் வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரியில் வேலையின்மை சதவீதம் 7.2-ஆக இருந்தது. இது 10.4 ஆக அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 7,500 யை கடந்துள்ளது. 239 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 
 

.