This Article is From Sep 14, 2020

நாடு, எல்லையில் உள்ள வீரர்களுடன் நிற்கும் என்ற செய்தியை நாடாளுமன்றம் அனுப்பும்: பிரதமர்

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

பிரதமர் எல்லை குறித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

New Delhi:

"நாடாளுமன்றம் நமது வீரர்களுடன் நிற்கிறது என்ற செய்தியை நாடாளுமன்றமும் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக அனுப்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.

"நம்முடைய வீரர்கள் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க மிகுந்த தைரியம், ஆர்வம் மற்றும் வலுவான உறுதியுடன் எல்லைகளில் உறுதியாக நிற்கிறார்கள். அவர்கள் கடினமான உயரத்தில் நிற்கிறார்கள், சில நாட்களில் பனிப்பொழிவு ஏற்படும். அதே வழியில், பாராளுமன்றம் ஒரு செய்தியில், ஒரே குரலில், அது நம் எல்லைகளைக் காக்கும் படையினருக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறது" என்று பிரதமர் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் கொரோனா தொற்று பிரச்னையையும் நாட்டின் பொருளாதார பிரச்னை மற்றும் வேலையின்மை குறித்த பிரச்னைகளையும் எழுப்ப திட்டமிட்டிருக்கின்றன. இந்நிலையில் பிரதமர் எல்லை குறித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

.