This Article is From Aug 26, 2019

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னை இருநாடு சம்பந்தப்பட்டது- ட்ரம்ப் முன்னிலையில் மோடி பேச்சு!

இந்தியா - பாகிஸ்தான் இடேயேயான பிரச்னை என்பது, இருநாடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் இடேயேயான பிரச்னை என்பது, இருநாடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசுகையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரே நாடாக இருந்தது. இரு நாடுகளும் தங்களது பிரச்னைகளை தனியாக தீர்த்துக் கொள்ளும் திறன் கொண்டவைதான்” என்று அழுத்தமாக தெரிவித்தார். 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தானிடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ட்ரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில், பிரதமர் மோடி இந்த கருத்தைக் கூறியுள்ளார். 

பிரான்ஸில் தற்போது ஜி7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. அதில் பங்கேற்க வந்த அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். 

மோடி பேசியதைத் தொடர்ந்து ஆரம்பித்த ட்ரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அதில் எல்லாம் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக அந்நாட்டு அரசாங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக்கும் இடையில் பல விவகாரங்கள் இருந்தாலும் படிப்பறிவின்மை, வறுமை மற்றும் நோய் பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். 

ஜம்மூ காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தகம் பற்றி இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் அதிகமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில், இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னை என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. 

.