தீர்ப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
New Delhi: .
நீதிமன்றம் மீதான மக்களின் தீர்ப்பை அயோத்தி வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மக்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்றான அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. இதன்படி, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதத்திற்குள்ளாக உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை தொடர்ந்த சன்னி வக்ப் போர்டுக்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. தீர்ப்பையொட்டி அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் மீதான மதிப்பை அயோத்தி வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் அயோத்தி விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. இதனை யாருக்குமான வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ நாம் பார்க்கக் கூடாது. ராம பக்தராக இருந்தாலும் சரி, ரகிம் பக்தராக இருந்தாலும் சரி; தேச பக்தியைத்தான் நாம் வலுப்படுத்த வேண்டும். அமைதியும், நல்லிணக்கமும் மேலோங்கட்டும்!
.
.
இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அயோத்தி வழக்கு தொடர்பாக 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கியது. இதன்படி, சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது