This Article is From Jun 18, 2020

“ஐ.நா பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி!“: பிரதமர்

இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன. கனடா தேர்தலில் தோல்வியடைந்தது.

“ஐ.நா பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி!“: பிரதமர்

ஐ.நா சபையின் பாதுகாப்பு குழு தேர்தலில் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றது. 

ஹைலைட்ஸ்

  • 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்றது
  • ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு
  • கனடா தேர்தலில் தோல்வியடைந்தது

ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு, மிகுந்த நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா சபையின் பாதுகாப்பு குழு தேர்தலில் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றது.  "ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்கு உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா செயல்படும்" என மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன. கனடா தேர்தலில் தோல்வியடைந்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா  2021-22 காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என ஐ.நா சமீபத்தில் டிவிட் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனியா, நைஜர், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், துனிசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களுடன் ஜனவரி 1 முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியா சக்திவாய்ந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றும்.

கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, போட்டியிடும் நாடுகளுக்கு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை. கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்திற்கு பின்னர் ஐநா சபையின் உறுப்பினர் முதல் முறையாக தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். முககவசங்கள் மற்றும் தனி மனித இடைவெளியுடன் இந்த வாக்கெடுப்புகள் நடைபெற்றன.

.