Read in English
This Article is From Oct 29, 2019

சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கை குறித்து முதல்வரிடம் கேட்டறிந்த மோடி! தமிழிலும் ட்வீட்!!

சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்வீட் செய்திருந்தார். இந்தியாவே தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவன் மீண்டு வர பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார் ராகுல்.

Advertisement
இந்தியா

கடந்த வெள்ளியன்று மாலை ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கினான் சுர்ஜித்.

Tiruchirappalli:

சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதுதொடர்பாக அவர் தமிழிலும் ட்வீட் செய்திருக்கிறார்.  

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 75 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென ட்விட்டரில் தமிழக மக்கள் பலர்  #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீட்பு நடவடிக்கைள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், 
துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக  பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் 
@EPSTamilNadu  உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

முன்னதாக நேற்று சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்வீட் செய்திருந்தார். இந்தியாவே தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவன் மீண்டு வர பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார் ராகுல். 

Advertisement