বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 15, 2019

“வன்முறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அசாம் மக்களுக்கு பாராட்டுகள்!”- PM Modi பேச்சு!

"காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள், தீயைப் பரவவிடுகிறார்கள்"- PM Modi

Advertisement
இந்தியா Edited by

Prime Minister Narendra Modi - “வன்முறை செய்யும் நபர்களிடமிருந்து தள்ளி இருக்கும் அசாமைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்குப் பாராட்டுகள்.

Dumka, Jharkhand:

பிரதமர் நரேந்திர மோடி, ‘அசாம் மக்கள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பதற்கு' பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடியுள்ளார் மோடி. அவர் காங்கிரஸ் கட்சியைப் பாகிஸ்தானோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். 

“வன்முறை செய்யும் நபர்களிடமிருந்து தள்ளி இருக்கும் அசாமைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்குப் பாராட்டுகள். தங்களின் நிலைப்பாட்டை அமைதியான முறையில் அவர்கள் எடுத்து வைத்து வருகிறார்கள்,” என்று ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியுள்ளார் பிரதமர் மோடி. 

அவர் மேலும், “காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள், தீயைப் பரவவிடுகிறார்கள். தங்களின் குரல்கள் கேட்கப்படவில்லை என்றால், அவர்கள் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள்.

Advertisement

பாகிஸ்தான், நாம் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தபோதும், ராமஜென்ம பூமி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் என்ன செய்ததோ அதையேதான் காங்கிரஸ் இன்று செய்து வருகிறது,” என்றார் மோடி.
 

Advertisement