சர்தார் படேல் பிறந்த தினத்தில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
Kevadia, Gujarat: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டுருந்த நிலையில், இன்று முதல் இந்த சட்டம் அமலாக்கு வருகிறது.
இதுதொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீர் புதிய எதிர்காலத்தை நோக்கி காலடி எடுத்து வைக்கிறது என தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் - அகமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ள பட்டேலின் பிரம்மாண்ட திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்தி மோடி, சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீருக்கு பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தான் வழங்கி வந்தது. நாட்டில் 370 சட்டப்பரிவு அமலில் இருந்த ஒரே இடம் இது தான்.
இதனால், கடந்த 30 ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். தற்போது இந்த சட்டப்பிரிவு 370 சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகள் என்பது நாங்களாக புதிதாக எடுத்த முயற்சியல்ல. அது சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவு அதனை நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுத்தினோம்," என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை எனது கைகளில் இருந்திருந்தால், அது தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்க இவ்வளவு காலம் எடுத்திருக்காது என்று சர்தார் படேல் கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
"ஒன்றுபடுவதே ஒரே வழி என்று சர்தார் படேல் எச்சரித்திருந்தார். அதனால், நாடாளுமன்றம் மேற்கொண்ட இந்த முடிவை சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கிறேன்," என்று அவர் கூறினார்.