New Delhi: வேளாண் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் கட்சியின் ஒரே அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் படல் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், "விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாட்டின் விவசாயிகள் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்" என்று பிரதமர் மோடி, காரில் ஒரு ரயில் பாலத்தை திறந்து வைத்து உரையாற்றியதில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் கட்சியின் ஒரே அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் படல் ராஜினாமா செய்ததன் மூலமாக தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதாக சிரமோனி அகாலி தளம் கட்சி கூறியுள்ளது.