ஹைலைட்ஸ்
- கொரோனா அச்சம்: பிரதமரின் ஹோலி நிகழ்ச்சிகள் ரத்து
- இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்தல்
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, தனது ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்திய நிலையில், இந்த வருடம் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்
.
கடந்த மாதம் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் இந்தியாவில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மத்திய மாநில அமைச்சர்கள், அரசுகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். இதனால் இந்தியர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
அடிப்படையாகச் செய்ய வேண்டிய கைகளைக் கழுவுதல், சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல், தும்மும்போது, இருமும்போது சுகாதாரமாக இருத்தல் போன்றவற்றைச் செய்தால் போதுமானது' என்று தெரிவித்துள்ளார்.