This Article is From Feb 06, 2020

ஒரே ட்வீட்டில் பட்ஜெட், மோடி, நிர்மலா சீதாராமனை கலாய்த்த ராகுல் காந்தி!!

இந்திய பொருளாதாரத்தை மோடி தனது பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் அழித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

இந்திய பொருளாதாரம் குலைந்துவிட்டதாக கூறியுள்ளார் ராகுல் காந்தி.

New Delhi:

மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம் தொடங்கி காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பாஜக-வை கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு எந்தவித அறிவிப்பும் கூறவில்லை என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலன் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் 'அன்புள்ள மோடி, பொருளாதாரம் சிதறிவிட்டது, இப்பொது வரவிருக்கும் பழியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். ஆகையால் இந்த 'யூஸ் லேஸ்' (Useless) பட்ஜெட்டை அறிவித்த (Clueless) 'குலுலெஸ்' நிர்மலா ஜி மீது பழியைப் போட்டு அவரை பதவியில் இருந்து நீக்கி விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார நிலைக்காக அடிக்கடி மோடியை குறித்து காட்டமாக பேசும் ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரத்தை மோடி தனது பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் அழித்துள்ளதாகவும் கூறினார்.
 

Advertisement
Advertisement