This Article is From Mar 15, 2019

ராகுல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

மக்களவை தேர்தல் 2019: இந்தியாவின் பிரபலங்களான, சச்சின் டெண்டுல்கர், ரத்தன் டாடா, ஏ.ஆர்.ரகுமான், பி.வி.சிந்து, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோரை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் முதல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

New Delhi:

சினிமா பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டுள்ளார்.

பல இளைஞர்கள் உங்களை பின்பற்றுகின்றனர். அவர்களை நீங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சொல்ல வேண்டிய நேரம் இது என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 

 

 

 

 

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்கப்படுத்துங்கள் என ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல், அவர் 

இந்நிலையில், வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு டிவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது அடுத்த பதிவில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.