This Article is From Dec 16, 2019

''குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கிறது'' : மோடி!

ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைகள் நடப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். 

''குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கிறது'' : மோடி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மோடி ட்வீட் செய்துள்ளார்.

New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், துரதிருஷ்டவசமானது என்றும், அவை வருத்தம் அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து நடைபெற்று வரும் வன்முறைகள் துரதிருஷ்டவசமானவை. அவை வருத்தத்தை அளிக்கின்றன. ஜனநாயகத்தில் விவாதங்கள், ஆலோசனைகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோ, இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோ நமது பண்பாடு கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். 

இன்னொரு ட்விட்டர் பதிவில் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியர்கள் குறிப்பாக ஏழை மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதுதான் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியதாகும். பிரிவினைவாத சக்திகள் நாட்டை துண்டாடுவதற்கும், பிரச்னைகளை உருவாக்குவதற்கும் நாம் அனுமதிக்கக் கூடாது.'

டெல்லி ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்த சூழலில் பிரதமர் மோடி தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் பலத்த காயமும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

.