Read in English
This Article is From Jun 02, 2018

இந்து, புத்த, முஸ்லீம் கோயில்களுக்கு சென்ற பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார்

Advertisement
உலகம்

புத்த கோயிலில் பிரதமர் மோடி

Highlights

  • அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் மோடி
  • மிகப் பழமையான மாரியம்மன் கோயிலுக்கு காலையில் சென்றார்
  • பின்னர் மசூதி மற்றும் புத்த கோயிலுக்கு மோடி சென்றார்
Singapore:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இன்று அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் இந்து, புத்த மற்றும் முஸ்லீம் கோயில்களுக்கு சென்றுள்ளார் மோடி.

முதலில் அவர், சிங்கப்பூரில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்றுள்ளார். இதுதான் தெற்கு ஆசியாவில் இருக்கும் மிகப் பழமையான இந்து கோயில் என்ற சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, `சிங்கப்பூரில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு சென்றதற்கு பாக்கியம் செய்தவனாக கருதுகிறேன். இந்தக் கோயில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருக்கும் கலாசார பிணைப்பு குறித்து எடுத்துரைக்கிறது' என்று பதிவிட்டார்.
 


இந்த மாரியம்மன் கோயில் 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நாகாபட்டிணம் மற்றும் கடலூரில் இருந்து சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்தவர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது.

இதையடுத்து மோடி, சிங்கப்பூரின் சுலியா மசூதிக்குச் சென்றார். இந்த மசூதி சுலியா முஸ்லீம்களால் கட்டப்பட்டது. இது பற்றி மோடி, `சுலியா மசூதிக்கு சென்றேன். இந்த நகரத்தில் இருக்கும் மிகப் பழமையான மசூதிகளில் இதுவும் ஒன்று' என்று ட்வீட்டினார்.
 


இறுதியாக புத்த டூத் ரெலிக் கோயிலுக்கும் அங்கிருக்கும் அருங்காட்சியகத்துக்கும் போனார் மோடி.
 


 
Advertisement