This Article is From Aug 22, 2018

"சகோதரத்துவ மனநிலை பரவட்டும்" பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது

New Delhi:

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் இரக்கம் மற்றும் சகோதரத்துவ மனநிலை நம்முடைய சமூகத்தில் பரவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

“அனைவருக்கும் பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளான இன்று, அனைவரும் இணைந்து ஒற்றுமையான சமூகமாக வாழ வேண்டும்” என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள். இந்த நாள் முதல், அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி பெருக வாழ்த்துகிறேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

.