Yoga Day: அனிமேஷன் பிரதமர் மோடி யோகா சொல்லிக் கொடுக்கிறார்
ஹைலைட்ஸ்
- பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தில் அனிமேஷன் வீடியோ
- தடாசனத்தை பனை மர ஆசானம் என்றும் அழைக்கலாம்.
- சர்வதேச யோகா தினத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
New Delhi: தடாசானா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகாசனங்கள் செய்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகதினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக தடாசனா மற்றும் யோகாசனங்கள் செய்து எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி போன்ற அனிமேஷன் உருவம் யோகா செய்து காட்டுகிறது.
வீடியோவில் கருப்பு நிற ட் ராக் ஷூட்டும் டீ-சர்ட்டும் அணிந்த மோடியின் உருவம் இதில் யோகசனத்தைக் கற்றுத் தருகிறது. பிரதமர் மோடி #YogaDay2019 என்ற ஹேஷ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
தடாசனா யோகா முறையை செய்யப் பழகினால், மற்ற பல யோகாசனங்களை சுலபமாகச் செய்ய முடியும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.