This Article is From Oct 14, 2019

பிரதமர் மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி : டெல்லியில் இறங்கியதும் நேர்ந்த சோகம்

டெல்லி காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி, குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி : டெல்லியில் இறங்கியதும் நேர்ந்த சோகம்

அந்த பையில் ரூ. 50 ஆயிரம் பணமும் இரண்டு மொபைல் போனும் டெபிட் கார்ட்டும் திரும்பி செல்வதற்கான டிக்கெட்டும் இருந்துள்ளன.

New Delhi:


பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடி பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கு நேற்று காலை வந்துள்ளார். அங்குள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்து இருந்தார். இதற்காக பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்து அங்கு ஆட்டோவில் சென்றார். இறங்க வேண்டிய இடத்தில் தமயந்தி பென் மோடி இறங்கியுள்ளார்.

அப்போது தமயந்தியை பைக்கில் இருந்த 2 நபர்கள் அவரிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அந்த பையில் ரூ. 50 ஆயிரம் பணமும் இரண்டு மொபைல் போனும் டெபிட் கார்ட்டும் திரும்பி செல்வதற்கான டிக்கெட்டும் இருந்துள்ளன.

இதனையடுத்து பக்கத்தில் உள்ள காவல்துறையில் உடனடியாக புகார் அளித்தார். டெல்லி காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி, குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.