Read in English
This Article is From May 27, 2019

வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து வாரணாசியில் ‘நன்றி’ தெரிவிக்கும் பிரதமர் மோடி!

542 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. 

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

Highlights

  • வெற்றி பெற்ற பின்னர் மோடி, முதல்முறையாக வாரணாசிக்குச் செல்
  • வாரணாசியில் காசி விஸ்வநாத் கோயிலுக்கு மோடி செல்கிறார்
  • அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்
Varanasi:

பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும், தான் வெற்றி பெற்ற தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. 

வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாத் கோயிலுக்கு அவர் இன்று செல்கிறார். அதன் பிறகு தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. சாலை மார்க்கமாக அவர் வாரணாசி கோயிலுக்கு செல்ல உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். 

மோடி விசிட் குறித்து காசி விஸ்வநாத் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா அசோக் திவேதி கூறுகையில், “2014 ஆம் ஆண்டைப் போலவே பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்த கோயிலுக்கு வந்து பூஜைகளை செய்ய உள்ளார் என்பது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். விஸ்வநாதரின் மிகப் பெரிய பக்தர் பிரதமர்தான்” என்று பூரிப்புடன் கூறியுள்ளார். 

இந்த முறையும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். 2014 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, அவருக்கு 1 லட்சம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. 

Advertisement

மே 19 ஆம் தேதி வாரணாசியில் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு ஒரு நாள் முன்னர் வீடியோ மூலம் பேசிய மோடி, ‘நான் ஒரு காசிவாசி' என்றார். 

நேற்று அகமதாபாத்திற்குச் சென்ற மோடி, தனது 98 வயது தாயை சந்தித்து ஆசி பெற்றார். அங்கு அவர் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டும் உரையாற்றினார். “6 கட்ட தேர்தல் முடிவுக்குப் பின்னர், நாங்கள் 300 தொகுதிகளுக்கும் அதிகமாக கைப்பற்றுவோம் என்றேன். அப்போது பலர் என்னை ஏறனம் செய்தனர். ஆனால், இப்போது தேர்தல் முடிவுகளை நான் சொன்னதைத்தான் பிரதிபலித்துள்ளன” என்று கூட்டத்தில் பேசினார் மோடி. அவர், 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

542 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. 

(PTI மற்றும் ANI தகவல்களுடன் எழுதப்பட்டது)

Advertisement