This Article is From Jul 17, 2020

திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் டிவிட்! என்ன சொன்னார் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றியபோது திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

சமீபத்தில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றியபோது திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக டிவிட்டரில் குறளை மேற்கோள்காட்டி தமிழில் டிவிட் செய்துள்ளார். அதில், “தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள  இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.” என்றும் , “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.” என்றும் பிரதமர் எழுத்தாளர் மாலனின் கட்டுரையை இணைத்து டிவிட் செய்துள்ளார்.

Advertisement