This Article is From Sep 07, 2018

‘அதிக அளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்!’- பிரதமர் மோடி பேச்சு

தொடர்ந்து பேசிய மோடி, ‘உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் தான் மிக வேகமாக முன்னேறி வருகிறது

‘அதிக அளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்!’- பிரதமர் மோடி பேச்சு

புது டெல்லியில் ‘மூவ்’ மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அதிக அளவிலான மின்சார வாகனங்களை நம் நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்’ என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மோடி, ‘உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் தான் மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல சாலைகள், ரயில் தடங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை வெகு விரைவாக கட்டி வருகிறோம். எனவே, நம் போக்குவரத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நாம் மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும். அது சுத்தமான காற்றை உருவாக்கும். மக்களுக்கும் நல்ல வாழ்வு கிடைக்கும். நாம் மாற்று எரிபொருளை மையமாக கொண்டு உருவாக்கும் வாகனங்கள் எல்லோராலும் வாங்கும் படி இருக்க வேண்டும். தனிப்பட்ட வாகனங்கள் மூலம் பயணிப்பதை விட மக்கள் பொதுப் போக்குவரத்தை விரும்பும் வகையில் நாம் பணிகள் செய்திட வேண்டும்’ என்றவர் தொடர்ந்து,

‘நல்ல போக்குவரத்து வசதி என்பது பொருளாதாரத்துக்கும் நல்லது. அது நேர விரையத்தைப் போக்கும். அதில் நிறைய வேலை வாய்ப்புகளும் உருவாகும்’ என்று கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.