Arvind Kejriwal alleged laxity in his security after a man managed to reach him and slap him
ஹைலைட்ஸ்
- ட்விட்டரில் இக்கருத்தை தெரிவித்தார் கெஜ்ரிவால்
- பியூஷ் கோயல், கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
- சமீபத்தில் கெஜ்ரிவால் சாலைப் பேரணியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
New Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி தான் இறக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்னதாக அவர், தனது பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருக்கும் பி.எஸ்.ஓ வீரர்கள் தன்னைக் கொன்று விட வாய்ப்புள்ளதாக கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடியே தன்னைக் கொல்ல திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
இது குறித்து கெஜ்ரிவாலுக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் ட்விட்டரில் வாதப் போர் நடந்தது.
சர்ச்சை வெடித்ததை அடுத்து கெஜ்ரிவால், முதலாவதாக, “எனது பி.எஸ்.ஓ என்னைக் கொல்லப் பார்க்கவில்லை. நான் இறக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார்” என்று இந்தியில் ட்வீட்டினார்.
அதற்கு கோயல், “உங்கள் பி.எஸ்.ஓ மீது நீங்களே சந்தேகம் எழுப்பி, டெல்லி போலீஸுக்கு அவப் பெயரை உருவாக்கிக் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு யார் பி.எஸ்.ஓ-வாக இருக்க வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுங்கள். இது குறித்து எதாவது உதவி வேண்டுமானால் சொல்லவும். பல்லாண்டு காலம் வாழ்க” என்று இந்தியிலேயே பதில் ட்வீட் போட்டார்.
முன்னதாக கெஜ்ரிவால், பஞ்சாப் தொலைக்காட்சி ஒன்றுக்கு, ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது சொந்த பாதுகாப்பு வீரர்களாலேயே எப்படி கொல்லப்பட்டாரோ, அதைப் போலவே நானும் கொல்லப்பட வாய்ப்புள்ளது' என்று கூறி பகீர் கிளப்பினார்.
இதைத் தொடர்ந்து கொதித்தெழுந்த டெல்லி பாஜக தரப்பு, கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதியது. இது குறித்து டெல்லி போலீஸுக்கு பாஜக தரப்பு, கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், தேர்தலையொட்டி சாலைப் பேரணியில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவாலை, ஒருவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதற்கு முன்னரும் கெஜ்ரிவால் மீது காலனி வீசப்பட்டுள்ளது, இங்க் வீசப்பட்டுள்ளது, மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டம்ன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் இருக்கும் 70 இடங்களில் 67-ஐ கைப்பற்றி ஆட்சியமைத்தது.
ஆட்சி அரியணையில் ஏறியதில் இருந்து மத்திய அரசு மீது தொடர் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார் கெஜ்ரிவால். மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதாக கெஜ்ரிவால் கூறி வருகிறார். இந்த முறை டெல்லி நாடாளுமன்றத் தேர்தலை, ‘முழு மாநில அந்தஸ்து' கோரிக்கையை முன் வைத்து சந்தித்துள்ளது ஆம் ஆத்மி.