ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரம் ஒரு துடிப்பான செயல்பாடு மிக்க துறைமுகமாக இருந்தது.
Chennai: இந்தியாவிற்கும் சீனாவிற்குமான உறவு குறிப்பாக சீனாவுக்கும் தமிழகத்திற்மான உறவு வரலாற்று சிறப்பு மிக்கது.
1,600 ஆண்டுகளுக்கு முன்பான பாரம்பரிய கடற்கரை நகரத்திற்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக பயணம் இருந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரம் ஒரு துடிப்பான செயல்பாடு மிக்க துறைமுகமாக இருந்தது. சீனா மற்றும் தெற்காசியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான நுழைவாயிலாக துறைமுகம் செயல்பட்டது. இது சீனாவின் பட்டு சாலையின் ஒரு பகுதியாக இருந்தது.
பல்லவ வம்சத்தின் முன்னாள் தலைநகரான காஞ்சிபுரம் இப்போது அதன் பட்டுக்கு மிகவும் பிரபலமான நகரமாகவுள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தங்கள் தூதரை சீனாவுக்கு அனுப்பியிருந்தனர். சீனப்பயணி ஹியூன் சுவாங் கடல்வழியாக வந்து காஞ்சிபுரத்தை பார்வையிட்டுள்ளார். இந்த பகுதி புத்த மதத்திற்கு செழிப்பான மையமாக இருந்தது என்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் எஸ். ராஜவேலு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் கண்கவர் கடற்கரை கோயில், அர்ஜூனர் தவம் செய்யும் அர்ஜுனன் தபசு சிற்பம் மற்றும் பஞ்சரதம் சிற்பங்களை பார்வையிடுகின்றனர். இந்த சிற்பங்கள் யாவும் பல்லவர் கால சிற்பக்கலைகளை பிரதிபலிக்கிறது.
பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி ஷிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை புதுப்பிக்க மற்றும் வர்த்தக எல்லை பிரச்னைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இந்த பேச்சுவார்த்தை உதவும்.
பிரதமர் மோடி சாலைப் பயணத்தை தவிர்த்து அதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார். ஜி ஜின்பிங், அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் காரில் செல்வார். பிரதமர் மோடி இன்று இரவு மாமல்லபுரத்தில் தங்குவார்.
இந்த சந்திப்பில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது காவல்துறை. சுமார் 6,000 பேர் பணியில் உள்ளனர்.
நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு 100 மீட்டருக்கு ஒன்று என்ற பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து நினைவுச் சின்னங்களும் சுற்றுலாவாசிகள் செல்ல தடை செய்யப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் அதிகாரிகள் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சீன அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்ட எழுத்தாளர் டென்சி சன்யூ உட்பட 10 திபெத் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுர சாலைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. நினைவுச்சின்னங்களை வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
“இந்த உள்கட்டமைப்பு, மேம்பாடு மாமல்லபுரத்தில் உள்நாட்டு சுற்றுலாவை பெரிய அளவில் உயர்த்தும். வட இந்தியாவின் ஏராளாமான மக்கள் விரும்பி பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாமல்லா பீச் ரிசார்ட்டின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறினார்.
சென்னையின் கலாஷேத்ரா அறக்கட்டளையினர் விருந்தினர்களை மகிழ்விக்க கலாசார நிகழ்ச்சியை நிகழ்த்தவுள்ளனர்.