மக்களவை தேர்தலில் மஜத மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பாமகவின் 17ஆவது பொது நிழல் நிதி அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து நான் ஏதாவது பேசுவேன் என்று செய்தியாளர்கள் எதிர்பார்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டோம். ஒன்று ஆம் ஆத்மி, மற்றொன்று மதச்சார்பற்ற ஜனதா தளம். இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசி முடித்து விட்டோம் என ராமதாஸ் கூறியதும் சிரிப்பலை எழுந்தது.
இதைத்தொடர்ந்தும், செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ் இவர்கள் எப்படியாவது நம் வாயில் இருந்து கூட்டணி குறித்த தகவலை வர வைக்க என்னுகின்றனர் என்றார்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், நீங்கள் என்ன நினைத்தாலும் என் வாயில் இருந்து கூட்டணி குறித்த பதிலை வர வைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.