This Article is From Feb 28, 2020

வெளிவந்த ‘திரௌபதி’- முதல் ஆளாகப் படம் பார்த்துவிட்டு கருத்துச் சொன்ன ராமதாஸ்!!

இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

"“பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச்  சொல்லும் படம்"

Highlights

  • இன்று ரிலீஸ் ஆகியுள்ளது திரௌபதி
  • திரௌபதியின் சிறப்புக் காட்சியைப் பார்த்துள்ளார் ராமதாஸ்
  • ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் ராமதாஸ்

மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி' இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி'. மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல் முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்' பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். அதன் பின்னர் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 

Advertisement

ராமதாஸ், “பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்குத் தேவையான பல செய்திகளைச்  சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! #திரௌபதி” என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டுள்ளார். 

Advertisement
Advertisement