This Article is From Aug 06, 2020

“சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்..!?”- லெபனான் வெடிவிபத்தை சொல்லி எச்சரிக்கும் ராமதாஸ்!

“சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி..."

“சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்..!?”- லெபனான் வெடிவிபத்தை சொல்லி எச்சரிக்கும் ராமதாஸ்!

"சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது"

ஹைலைட்ஸ்

  • லெபனானில் இரு நாட்களுக்கு முன்னர் வெடிவிபத்து ஏற்பட்டது
  • பெய்ரூட் துறைமுகத்தில் இந்த விபத்து ஏற்பட்டது
  • இந்த விபத்தினால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம், சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்படுள்ளது.

துறைமுகத்திற்கு அருகிலிருந்த கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.

மேலும், ”தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என செய்தியாளர் சந்திப்பில் டயப் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் மருத்துவர் ராமதாஸ், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய  வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” எனத் தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளார். 


 

.