This Article is From Jun 19, 2020

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது! சீனா தாக்குதல் குறித்து ஆலோசனை

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர்.  இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20  பேர் உயிரிழந்தார்கள். 

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது! சீனா தாக்குதல் குறித்து ஆலோசனை

ஆம் ஆத்மி மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் பங்கேற்கவில்லை.

லடாக் எல்லையில் சீனா  நடத்திய தாக்குதலை குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடியின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பங்கேற்கவில்லை.

அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர்.  இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20  பேர் உயிரிழந்தார்கள். 

இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மீண்டும் பதற்றம் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையையும் இரு நாடும் மேற்கொள்ளாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு  அளித்திருந்த பேட்டியில், 'சீனாவின் தாக்குதல் என்பது  தேசப்பாதுகாப்பு  குறித்த விஷயம். நமது நிலத்தை யாரும் அபகரிக்க விட மாட்டோம். நாட்டிற்காக  உயிரிழந்த வீரர்களை எண்ணி பெருமை அடைகிறோம். அவர்களின் தியாகம் வீண் போகாது.  இந்த தாக்குதலை சீனா  திட்டமிட்டே நடத்தியள்ளது. இதற்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுக்கும்' என்று தெரிவித்தார். 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்திய வீரர்களுக்கு ஆயுதம் அளித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என்று நேற்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், இந்திய வீரர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும், விதிப்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சர்வதேச எல்லையில் பயன்படுத்தக் கூடாது என்றும் விளக்கம் அளித்தார். 

சீனா நடத்திய தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.  இந்த சூழலில் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடங்கியுள்ளார். 

.