Read in English
This Article is From Mar 06, 2020

'மோடியின் யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்து விட்டன' - ராகுல் காந்தி கடும் தாக்கு!!

கடன் சுமையால் தள்ளாடும் யெஸ் பேங்க்கின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது குறித்து, எதிர்க்கட்சியினர் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

யெஸ் பேங்கிற்கு அளித்து வந்த கடனை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

Highlights

  • யெஸ் பேங்க் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மோடியை விமர்சித்து வருகின்றன
  • யெஸ் பேங்க் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது
  • யெஸ் பேங்க்கில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
New Delhi:

யெஸ் பேங்கின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'இனி நோ யெஸ் பேங்க். மோடி மற்றும் அவரது யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்து விட்டன' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடன் சுமையால் நெருக்கடியில் தவிக்கும் யெஸ் பேங்க்கின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் நேற்று கொண்டு வந்தது. இதையடுத்து, வங்கியில்  கணக்கு வைத்திருப்போர் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் மறு உத்தரவு வரும் வரையில் யெஸ் பேங்க்கால் கடன் கொடுக்கவோ, வாங்கவோ, முதலீடு செய்யவோ, உத்தரவாதம் அளிக்கவோ முடியாது. 

Advertisement

அடுத்த மாதம் முதற்கொண்டு யெஸ் பேங்கின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கிய நியமித்துள்ள பிரஷாந்த் குமார்தான் கவனிக்க உள்ளார். அவர் ஸ்டேட் வங்கியின் தலைமை நிதி அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement