This Article is From Oct 24, 2018

பிரச்சனைகளை ஏன் அதிகப்படுத்துகிறீர்கள்? வருண் காந்தியிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி

வருண் காந்தி கூறுகையில், எம்.பிக்களின் சொத்து விவரங்களை கூறாமல் தொடர்ந்து, அவர்களது ஊதியம் அதிகரிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்

பிரச்சனைகளை ஏன் அதிகப்படுத்துகிறீர்கள்? வருண் காந்தியிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி

எம்பிக்களின் ஊதிய உயர்வு குறித்து தான் பேசிய போது பிரதமரின் அலுவகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வருண்காந்தி கூறினார்.

Bhiwani:

பிஜேபி எம்.பி வருண் காந்தி எம்பிக்களின் ஊதிய உயர்வு குறித்து தான் பேசிய போது பிரதமரின் அலுவகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், எங்களுடைய பிரச்சனைகளை ஏன் அதிகப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டாதாக கூறினார்.

பீவானியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருண் காந்தி பேசுகையில், எம்பிக்களின் ஊதிய உயர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். எல்லா நிறுவனங்களிலும் ஊழியர்கள் தங்களுடைய கடின உழைப்பினை அடிப்படையாக கொண்டு ஊதிய உயர்வினை பெறுகிறார்கள். ஆனால், கடந்த 10 வருடங்களில் எம்பிக்களின் ஊதியம் 7 முறை அதிகரித்துள்ளது என்றார்.

நாட்டின் கல்விமுறை குறித்து கேள்வி எழுப்பியவர், உத்திரபிரதேச பள்ளிக்கூடங்களை உதாரணமாக கூறினார். உத்திரபிரதேசத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிப்பினை தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக கூறினார். மத மற்றும் திருமண சடங்குகள், இறுதி சடங்குகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டங்கள் என அனைத்தும் பள்ளி வளாகங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் கோடி நிதி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதைக் கொண்டு கட்டடங்கள் கட்டப்படுகிறது. இதனை கல்வி என்று சொல்ல முடியாது என்று கூறினார்.

தற்போது நம்நாட்டில் 40 சதவீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகள், ஒப்பந்த முறையில் நிலங்களை வாங்கி விவசாயம் செய்கின்றனர். ஆனால், இது சட்ட விரோதமான செயல் இருப்பினும் அரசாங்கத்திடமிருந்து எந்த விதமான உதவியும் கிடைக்காததால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் கடந்த 10 வருடங்களில் விதர்பா விவசாயிகளில் 17,000பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாசுபாடு குறித்து பேசிய அவர், நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாடு மிகவும் ஆபத்தானது. மலர் கொத்துகளுக்கு பதில் மரக்கன்றுகளை கொடுங்கள் என்றார்.
 

.