Read in English
This Article is From Nov 25, 2018

போலீசார் நடத்திய சோதனையில் பிடிபட்ட அரிய வகை பாம்பு!

மேற்கு வங்காளத்தில் உள்ள முஷிடாபாத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் அரிய வகை பாம்பொன்று சிக்கியது.

Advertisement
நகரங்கள்
Kolkata:

மேற்கு வங்காளத்தில் உள்ள முஷிடாபாத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் அரிய வகை பாம்பொன்று சிக்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார்க்கு இச்சம்பவம் அதிர்ச்சியளித்து.

வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு நடத்தியபோது அவர்கள் அது மிக அரிய வகை தாக்ஷாக் பாம்பு என்றும் அதன் கள்ள சந்தை மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர்.

அந்நபரை கைது செய்த போலீசார் கூறுகையில் ‘இஷா ஷேக் என்னும் அந்நபரிடம் வெள்ளக்கிழமையன்று காலை நடத்திய சோதனையில் அரிய வகை பாம்பு பிடிபட்டது, பல கோடி ரூபாய் மதிப்புடைய இப்பாம்பை மீட்டு நாங்கள் வனத்துறையினரிடம் பத்திரமாக ஓப்படைத்துள்ளோம். அந்நபரிடம் மேலும் விசாரனையில் ஈடுபட்டபோது, ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்த கடத்தல் கும்பலிடம் பாம்பை ஒப்படைக்க பட இருந்தது தெரிய வந்தது' எனக் கூறினர்.

அதைத் தொடர்ந்து கடத்தலில் பிடிபட்ட இஷாவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், ஜான்கிபூர் நீதிமன்ற காவலில் மேலும் விசாரணை நடத்துவதற்காக வைத்துள்ளனர்.

Advertisement
Advertisement