அந்த வீட்டின் வழியாக சென்ற ஒருவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்
மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, ஒரு வீட்டில் இருந்து சிறு குழந்தை அழும் குரலும் ஒருத்தர் ‘நீ ஏன் இறந்து விடக் கூடாது?' என்று மிரட்டும் குரலும் கேட்டதால், அந்த வழியாக சென்ற ஒருவர் பதறி போய், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
குழந்தையை தான் மிரட்டுகிறார் என எண்ணி பெர்த்தில் உள்ள அந்த வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வாலிபர், மிரட்டிக்கொண்டிருந்தது குழந்தையை அல்ல. அங்கு இருந்த எட்டுகால் பூச்சியை.
BBC செய்திகளில், வனேரோ போலீஸார், ட்விட்டரில், ‘நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை - அந்த எட்டுகால் பூச்சியை தவிர' என ட்விட் செய்து பின் அதை அழித்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எட்டுகால் பூச்சியை கண்டு பயமுடைய அந்த இளைஞர், பயத்தால் தான் அப்படி சத்தம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் இதற்கு காவல்துறையினரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வனேரோ போலீஸார் ட்விட் அழிக்கப்பட்டதிற்கான காரணம் என்னவென்று கேட்டதற்கு, 'அதில் சில டைப்பிங் தவறுகள் இருந்தது. அதனால் தான் அந்த ட்விட் அழிக்கப்பட்டது' எனப் பதில் அளித்தனர்.
சென்ற ஆண்டு, மிக பெரிய எட்டுகால் பூச்சி ஒன்று ஆஸ்திரேலியாவில் ஒரு காரில் இருப்பது போன்ற வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Click for more
trending news