This Article is From Jan 19, 2019

லண்டனில் திடீரென தீப்பிடித்த போலீஸ் வாகனம்

மெக்கானிக்கல் கோளாறுகளால் இப்படி தீப்பிடித்திருக்கும் என கூறப்படுகிறது.

லண்டனில் திடீரென தீப்பிடித்த போலீஸ் வாகனம்

போலீஸ் வாகனம் திடீரென தீப்பிடித்தது

லண்டனில் போலீஸ் வாகனம் ஒன்று தானாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர உதவிக்கு ஒருவர் அழைத்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. லண்டனின் தென்கிழக்கு பகுதியான ப்ரோம்லேயில்  இது நடந்தது.

தீப்பிடித்து எரித்தது BMW 5 சீரிஸ் கார் என்றும், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின் புகைப்படங்களை ப்ரோம்லே போலீசார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

 

‘நேற்று ப்ரோம்லேவில் நிறுத்தப்பட்டிருந்த எங்கள் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த போலீஸ் அதிகாரி காயம் இன்றி மீட்கப்பட்டார். எதனால் இச்சம்பவம் நடந்தது என தெரியவில்லை' எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெக்கானிக்கல் கோளாறுகளால் இப்படி தீப்பிடித்திருக்கும் என கூறப்படுகிறது.

Click for more trending news


.