हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 08, 2018

#MeTooUrbanNaxal பதாகை அணிந்ததற்காக கிரிஷ் கர்னாட் மீது வழக்குப்பதிவு

கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, மறைந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் நினைவுவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரில் நடைப்பெற்றது

Advertisement
இந்தியா
Bengaluru:

#MeTooUrbanNaxal என்ற பதாகையை கழுத்தில் அணிந்து வந்ததால் சினிமா நடிகரும், நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்நாடின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறையினர், 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. அதனை தொடர்ந்து, #MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி, மறைந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் கிரிஷ் கர்நாட், தன் கழுத்தில் #MeTooUrbanNaxal என்ற வாசகம் எழுதிய பதாகையை அணிந்திருந்தார்.

இதனால் பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பி.அம்ருதேஷ், கர்நாட் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தார், மேலும் நக்ஸல்களோடு அவருக்கு உள்ள தொடர்பை விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட விதான் சவுதா காவல் துறையினர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கிரீஷ் கர்னாட் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement