புலந்தஷகர் வன்முறை சம்பவம் காரணமாக மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Lucknow: பசுகொலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பசுக்காவலர்களால் தாக்கப்பட்டு போலீஸ் அதிகாரி மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், இன்று அந்த மாவட்டத்தில் உள்ள உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
இதேபோல், மேலும் இரண்டு காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, வன்முறை ஏற்பட்ட நேரத்தில் அதிக அளவு போலீசார் சம்பவ இடத்தில் இல்லாத காரணத்தினாலும், உயர்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததும் வன்முறை அதிகமாக காரணம். அதனால், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் போலீசார் வேகமாக செயல்படவில்லை என்ற காரணத்திற்காக பணியடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து டிஜிபி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் டிஜிபி ஓ.பி.சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் புலந்தஷகர் கிராமத்தில் பசுக் கொலைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர் பசுக் காவலர்கள். அப்போது நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது அப்பகுதி காவல் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர்.
இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த காவல்துறை அதிகாரி ஷுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, புலந்தஷகர் கிராமத்தில் நடந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் ஷூபோத் குமார் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு விபத்து என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.