हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 14, 2019

மீண்டும் கும்பல் வன்முறை: ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரி அடித்துக் கொலை

குன்வாரியாவில் வசிக்கும் தலைமை கான்ஸ்டபிள் அப்துன் கனி, 48, நில தகராறு குறித்து விசாரித்துக் கொண்டிருந்ததார்

Advertisement
இந்தியா Edited by
Jaipur:


ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தில் சனிக்கிழமை காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது சமீபத்திய கும்பல் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குன்வாரியாவில் வசிக்கும் தலைமை கான்ஸ்டபிள் அப்துன் கனி, 48, நில தகராறு குறித்து விசாரித்துக் கொண்டிருந்ததார். அத்துமீறல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு கும்பல் கடுமையாக அவரைத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்தார்.

அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றபோது காயத்தினால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மாநில காவல் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த விசாரணைக்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

Advertisement

சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ரக்பர் கான் 28 மாடு கடத்துவதாக கூறி ஒரு கும்பல் ஒன்று தாக்கியது. காயங்களுடன் மீட்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

Advertisement