This Article is From Jun 26, 2018

தனது பயிற்சியாளரை காப்பாற்ற துடித்த காவல் நாய்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ!

தனது பயிற்சியாளருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயலும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது

தனது பயிற்சியாளரை காப்பாற்ற துடித்த காவல் நாய்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ!

ஆஃபிசர் போன்சோ என்கிற காவல் நாய், தனது பயிற்சியாளருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயலும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மேட்ரிட் காவல் துறையினர் ட்விட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ, இருபது லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியும் K9 வகை நாய்கள் பயிற்சியாளருமான ஒருவர், மயக்கம் அடைந்து தரையில் விழுவது போல நடிக்கிறார். அதனை கண்ட போலீஸ் பயிற்சி நாய், ஒரு கணம் கூட தாமதிக்காமல் ஓடோடி வந்து தன் பயிற்சியாளருக்கு முதலுதவி செய்கிறது. CPR எனப்படும் சுவாசத்தை மீட்டெடுக்கும் முதலுதவியை ,காவல் நாய் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. பயிற்சியாளரின் இதயத்தை மேலும் கீழுமாக அழுத்தி, சுவாச மீட்பு முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், பயிற்சியாளரால் மூச்சுவிட முடிகிறதா என்பதை முகத்தின் அருகே சென்று பார்க்கிறது.

 

 

சில நிமிடங்களுக்கு பிறகு, எழுந்திருக்கும் பயிற்சியாளர் “உயிர் காக்கும்” பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல் நாயை கட்டித்தழுவி பாராட்டுகிறார்.

“உலகிலேயே உங்களை விடவும் உங்களை அதிகம் நேசிக்கக்கூடிய, அன்பு செலுத்தக்கூடிய ஒரு உயிரென்றால் அது நீங்கள் வளர்க்கும் நாயாக மட்டுமே இருக்க முடியும்” என்கிற வாசகத்தோடு இந்த வீடியோவை மேட்ரிட் காவல் துறையினர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை கண்ட பலரும், காவல் நாய் ‘ஆப்பிசர் போன்சோ'வை பாராட்டியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

 

Click for more trending news


.