சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. ரவுடி கதிர்வேலை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், சேலத்தை அடுத்த காரிபட்டியில் கதிர்வேல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், ரவுடி கதிர்வேலை போலீசாரை கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சில காவலர்களும் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நடந்த மோதலில் ரவுடி கதிர்வேலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும்போது, ரவுடி கதிர்வேலை கைது செய்ய சென்ற போது, அவர் காவலர்களை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மேலும் மூன்று ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலத்தில் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)