This Article is From Dec 13, 2018

"குண்டுவெடிப்பு மிரட்டலால் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு பாதிப்பில்லை"

சிலிக்கான் வேலியில் சமீபகாலமாக இது போன்ற மிரட்டல்கள் தொடர்கின்றன.

போலீஸின் அறிக்கைக்கு பின் ஃபேஸ்புக்கும் இதே தகவலை உறுதி செய்தது. (Reuters Photo)

San Francisco:

சிலிக்கான் வேலியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடப்பட்டது என்ற செய்தி வெளியானது. பின்பு போலீஸார் வந்து பல மணி நேரம் நடத்திய சோதனைக்கு பின்பு எந்த அபாயமும் இல்லை என்று தகவல் தெரிவித்தனர். 

நியூயார்க் போலீஸுக்கு ஒரு அடையாளம் தெரியாத போன் கால் வந்துள்ளது. அதில் கலிஃபோர்னியாவில் மென்லோ பார்க்கில் உள்ள ஃபேஸ்புக் வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக அங்குள்ள அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டு போலீஸ் சோதனை தொடங்கியது என்று கூறினர்.

நீண்ட சோதனைக்கு பின்பு போலீஸ் இந்த வளாகம் பாதுகாப்பாக தான் உள்ளது. எந்த வெடிகுண்டும் இங்கு இல்லை என்று தெரிவித்தனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளோடு நடத்திய சோதனையில் எந்த பொருள்களும் அபாயகரமானதாக சிக்கவில்லை.

போலீஸின் அறிக்கைக்கு பின் ஃபேஸ்புக்கும் இதே தகவலை உறுதி செய்தது. சிலிக்கான் வேலியில் சமீபகாலமாக இது போன்ற மிரட்டல்கள் தொடர்கின்றன. யூ -ட்யூபில் ஒரு பெண் மூன்று பேரைகாயப்படுத்தி தானும் சுட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.