This Article is From Nov 27, 2018

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை: டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

காவலர்கள் அதிக நேரம் வாட்ஸ் ஆப்பில் செலவிடுவதாக அவர்களுக்கு செல்போன் பயன்படுத்த டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை: டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை

முதல்வர் பாதுகாப்பு பணி, முக்கிய விஐபி பாதுகாப்பு பணி, சட்டம் ஒழுங்கு தொடர்பான பாதுகாப்பு பணி, கோவில் திருவிழாக்கள் பாதுகாப்பு பணி போன்ற இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்படுவார்கள்.

அப்படி பணியில் இருக்கும் காவலர்கள் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை செலவழிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த வகையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கீழ் உள்ள, அதாவது காவலர் நிலையில் உள்ள யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது தெளிவாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ள நோட்டீஸ் போர்டில் அறிவிப்பை வெளியிடவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரி செல்போன் பயன்படுத்த அனுமதித்தால் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியின் போது காவலர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

.