Read in English
This Article is From Jun 22, 2019

சென்னையில் குடிபோதையில் காவலரை சரமாரியாக தாக்கிய 4 பேர் கைது! (வீடியோ)

சம்பவத்தை நேரில் பார்த்தவர் தனது மொபைலில் எடுத்த வீடியோவில், காவலரை சுற்றி 4 பேர் நின்று கொண்டு அவரை தாக்குகின்றனர்.

Advertisement
நகரங்கள் Edited by

Highlights

  • பொது இடத்தில் மது அருந்தியவர்களை போலீசார் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்
  • போலீசாரின் வாக்கி - டாக்கியையும் பறித்த அந்த கும்பல்
  • பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவர்களிடமிருந்து போலீசை மீட்டுள்ளனர்.
Chennai:

சென்னை கோடம்பாக்கத்தில் பொது இடத்தில் மது அருந்தியவர்களை தடுத்து நிறுத்திய காவலரை 4 பேர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் தனது மொபைலில் எடுத்த வீடியோவில், காவலரை சுற்றி 4 பேர் நின்று கொண்டு அவரை தாக்குகின்றனர். லத்தியால் அவர்களை தாக்கி தன்னை அவர்களிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிசெய்கிறார் அந்த காவலர், எனினும் அந்த 4 பேரும் காவலரின் கையை விடாம் பிடித்து வைத்து தாக்க முயல்கின்றனர். 

இந்த சம்பவத்தின் நடந்துகொண்டிருக்கும் போது வாகனங்கள் அந்த போலீசாரை கடந்து செல்கிறது. தொடர்ந்து, அந்த காவலரை அவர்கள் சாலையின் தடுப்புக்கு அந்த பக்கம் தள்ளிவிட முயற்சி செய்கின்றனர். தான் தாக்கப்பட்டது குறித்து அந்த காவலர் சக காவலருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றபோது, அந்த 4 பேரும் காவலரின் வாக்கி - டாக்கியையும் பறித்தனர். 

கடந்த 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் மதுபோதையில் இருந்த 4 பேரும், முதலில் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவலர் தனது பைக்கில் வைத்திருந்த லத்தியை எடுத்து அவர்களை தாக்கியுள்ளார். 

Advertisement

இந்நிலையில் ரோந்து பணியிலிருந்த மற்ற காவலர்கள் அங்கு வந்து 4 பேரையும் கைது செய்தனர். ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அந்த 4 பேரும் வழக்கறிஞர்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தின் செல்போன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement