மாவோயிஸ்ட் தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் ராக்கேஷ் குஷால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Raipur: நேற்று சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உதவி காவலரான ராகேஷ் குஷால் இறப்போடு சேர்த்து இதுவரை 4 பேர் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், தண்டேவாடாவின் ஆரன்பூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான ராகேஷ் குஷால், ராய்பூர் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மேலும், சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பிரதாப் சிங், உதவி காவலர் மாங்கலு மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் மற்றும் ராகேஷ் குஷால் உட்பட இரு காவலர்கள் ஆரன்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்டுகளால் தாக்கப்பட்டனர். அவர்கள் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு காவலரான விஷ்ணு நீட்டம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராகேஷ் குஷாலின் சொந்த ஊர் தண்டேவாடா மாவட்டத்திலுள்ள பார்சூர் கிராமம் ஆகும். ராய்ப்பூரிலிருந்து 400கிமீ தொலைவில் உள்ளது. பிரதேச பரிசோதனைக்கு பின் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.