கூட்டணியை விட்டுத் தரலாம்; ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திங்களன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் அதிமுகவில் நிலவும் சூழல், பாஜகவுடனான உறவு மற்றும் தேர்தல் கூட்டணி நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கூட்டணியை வேண்டுமானால் விட்டுத் தரலாம்; ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது.
எங்களைப் பொறுத்தவரை கூட்டணி என்பது துண்டு போன்றது; கொள்கை என்பது வேட்டி போன்றது.
அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.