This Article is From Apr 23, 2019

அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை

அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட மோட்டர் வாகன சட்டத்தில் அனுமதியில்லை என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை

தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது போன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு போக்குவரத்துத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில்மனுவில், அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டப்படி இடமில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், அரசியல் கட்சியினர் தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைத்து கொள்வதற்கும் அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

.