This Article is From Jun 27, 2018

வேட்பாளர்களுக்கும் தேவை மருத்துவ பரிசோதனை - உயர்நீதிமன்றம்

கிளார்க் முதல் நீதிபதிகள் வரை பணி அமர்த்துவதற்கு முன்பு முழு உடல் மருத்துவ பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது

வேட்பாளர்களுக்கும் தேவை மருத்துவ பரிசோதனை - உயர்நீதிமன்றம்
Chennai:

அரசியல் என்பது ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அரசியலில் பங்கெடுக்க அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவிதுள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், உடல் தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்ற நாடுளமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும், மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது..

“கிளார்க் முதல் நீதிபதிகள் வரை பணி அமர்த்துவதற்கு முன்பு முழு உடல் மருத்துவ பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. நாட்டின் சட்டத்தையே உருவாக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிகள் ஏன் மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்க கூடாது?” என கேள்வி எழுப்பினார் வழக்கை விசாரித்த நீதிபதி கருணாகரன்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜி.ராஜகோபாலன்,” மக்கள் வேட்பாளரின் உடல் நலனை கருத்தில் கொள்வதில்லை. கட்சியின் சின்னங்களை பார்த்து தான் வாக்களிக்கின்றனர்” என்றார். மேலும் இது குறித்து ,மத்திய அரசின் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய பத்து நாட்கள் வேண்டும் என நீதிபதியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள், குற்ப் பின்னணி கொண்டவர்களை, வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

நீதிமன்றம் உத்தரவிட்டால், தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என கூடுதல் சொலிசிட்டர் தெரிவித்தார். அதனை அடுத்து, வழக்கு விசாரணை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

.